அவசரமான
ஒரு மாலை பொழுது!
பரபரப்பான ஒரு
சாலையை கடக்கும் போது!
யாரோ உன் பெயர்
சொல்லி அழைக்கக் கேட்டேன்!
யாரோ ஒரு காதலி
தன் காதலனை அழைத்தாள்!
ஏனோ அவள் மேல்
கோபம் வந்தது!
அப்படியே நின்று விட்டேன்!
நட்ட நடு சாலையில்!
சறுக்கிச் செல்லும்
வாகனங்கள் மத்தியில்!
பின்னால் வந்த
தோழி தோளைத் தட்டி
கூட்டி வந்தாள்!
உன்னை காதலிக்க
மட்டுமே செய்தேன்!
என்றிருந்த எனக்கு
அப்போதுதான் புரிந்தது!
உன் மீது பைத்தியமும்
ஆனேன் என்று!
இது எல்லாமே
உன்னாலா?
அன்றேல் என்
விதியாலா?
No comments:
Post a Comment