ஒரு வெற்று
காகிதத்தில்
சூரியன் தீட்டிய
ஓவியமாய்!
மஞ்சளும், ஆரஞ்சும்
கலந்த
வண்ணமயமான
வானம்!
ரசிகத்தான்
வந்தேன்!
அதில்
கரைந்து போவேன்
என்று
எண்ணவில்லை!
கரைந்து
கரைந்து
இதோ
நெடுநாட்களுக்குப் பின்
என் கவிதையை
பிரசவிக்கிறேன்!
மஞ்சளும், செந்துரமும்
இட்டு
மங்களம் நிறைந்த
ஒரு மனைவியாய்
என் கண்முன்னே!
உன் ஒளி வெள்ளத்தில்
மூழ்கும் மகளாய்
நான்!
தங்க நீரோடையில்
தனித்து நீந்தும்
தங்கச் சூரியன்!
என்னை
கண் சிமிட்டி
கேலி செய்யும்
நட்சத்திரங்கள்!
ரசனையின் இடையில்
என் மகிழ்ச்சிகளைப்
போன்று
இதுவும் சில நொடிகளே!
என்ற எண்ணம்!
மௌனம் காத்தது!
என் பேனாவும்
என் மனமும்!
அருமை அருமை
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பதிப்பை